News October 9, 2025
CJI-ஐ தாக்க முயன்றவர் மீது வழக்கு பாய்ந்தது

CJI பி.ஆர்.கவாய்யை காலணி வீச தாக்க முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது பெங்களூருவில் Zero FIR பதியப்பட்டுள்ளது. அனைத்து இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பக்தவாத்சலா அளித்த புகாரின் அடிப்படையில், விதான் சவுதா போலீஸ் IPC 132, 133 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளது. அதில் உடனடியாக அவருக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியுள்ள நிலையில், வழக்கு டெல்லி திலக் மார்க் போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
Similar News
News October 9, 2025
Fatty liver-ஐ குறைய இந்த ஒரு பழம் போதும்!

அதிகப்படியான மது அருந்துவது, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது போன்றவற்றால் கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty liver) ஏற்படுகிறது. இதற்கு பப்பாளி மற்றும் அதன் விதைகளை உட்கொள்வது நன்மை பயக்கும். பப்பாளியை தேனுடன் சேர்த்து சாப்பிடுவது பலனளிக்கும். இதனுடன் அரைத்த பப்பாளி விதைகளை தண்ணீரில் கரைத்து குடிப்பது, கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்க உதவும். SHARE பண்ணுங்க.
News October 9, 2025
இவர்களில் யார் இந்தியன் ஜேம்ஸ் பாண்ட்

மேற்கண்ட புகைப்படங்களை பார்த்து நம் கிரிக்கெட் நட்சத்திரங்கள் படத்தில் நடிக்கப் போகிறார்களா என சந்தேகப்படாதீர்கள். CEAT விருதுகள் விழாவில் பங்கேற்பதற்காக நம் வீரர்கள் ராயலாக கோட் சூட் அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோஷுட் இவை. இந்த புகைப்படங்கள் SM-ல் வைரலாகியுள்ள நிலையில், இந்தியன் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு ஸ்ரேயஸ் ஐயர் பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
News October 9, 2025
BREAKING: விஜய் கட்சியுடன் கூட்டணி.. பிள்ளையார் சுழி

தவெகவுடன் கூட்டணிக்கு <<17952830>>பிள்ளையார் சுழி<<>> போடப்பட்டுவிட்டதாக EPS பேசியது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய்யுடன் EPS, செல்போனில் 30 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்போது, திமுகவை எதிர்க்க கூட்டணியில் சேர விஜய்க்கு, EPS அழைப்பு விடுத்ததாகவும், பொங்கலுக்கு பிறகு தனது முடிவை கூறுவதாக விஜய் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் பிள்ளையார் சுழி என EPS கூறியுள்ளார்.