News July 24, 2024
சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் மீது வழக்குப்பதிவு

மாற்றுத்திறனாளி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக, சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் பூஜா கெட்கர், 23ஆம் தேதிக்குள் முசோரி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்றுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், அவர் மீது டெல்லி காவல் நிலையத்தில் UPSC சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பூஜா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
மாரடைப்பு வருவதை முன்பே கண்டறிய..

மாரடைப்புகள் தற்போது அதிகளவில் ஏற்பட தொடங்கி விட்டன. சில சோதனைகள் மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை ஆரம்பத்திலேயே தெரிந்துக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள். இந்த டெஸ்ட்டுகளை எடுத்துப்பாருங்கள்: Waist circumference, HbA1C, CT கரோனரி ஆஞ்சியோகிராம், எக்கோ கார்டியோகிராம், ECG. மாரடைப்பிற்கு சிகரெட், தூக்கமின்மை, மன அழுத்தம், தவறான உணவு பழக்கம் போன்றவை முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.
News March 3, 2026
அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யாது ஏன்?

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ₹1,020 கோடி ஊழல் நடந்தது என்ற புகாரின் அடிப்படையில் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இதை எதிர்த்து, அதிமுகவின் இன்பதுரை தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News March 3, 2026
சற்றுமுன்: காய்கறிகள் விலை குறைந்தது

வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைந்துகொண்டே வருகிறது. மார்க்கெட் நிலவரப்படி, முருங்கைக்காய் ₹10 குறைந்து 1 கிலோ ₹50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கேரட், முள்ளங்கி, காலிஃபிளவர், மிளகாய் ஆகிய காய்கறிகளின் விலை கிலோவுக்கு ₹5 – ₹10 ரூபாய் வரை குறைந்து முறையே ₹20, ₹10, ₹12, ₹60 என விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


