News April 7, 2024
NIA அதிகாரிகள் மீது வழக்கு

மே.வங்கத்தில் NIA அதிகாரிகள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் 2 TMC தொண்டர்களை சனிக்கிழமை NIA கைது செய்தது. அப்போது NIA வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து NIA புகார் அளித்த நிலையில், கைதான நபர்களின் குடும்பத்தினரும் புகார் அளித்தனர். அதன்பேரில், பெண்ணை துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 31, 2026
ஒரே தொகுதியில் சசிகலா, ராமதாஸ் தரப்பு போட்டி

சட்டப்பேரவைத் தேர்தலில் சசிகலா – ராமதாஸ் கூட்டணி அமைத்த நிலையில், இருவரும் மயிலாடுதுறை தொகுதிக்கு தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். கூட்டணி அறிவிப்புக்கு பிறகு இருதரப்பும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இந்த சூழலில் ஒரே தொகுதியில் இருதரப்பும் போட்டியிடுவதால், சசிகலா – ராமதாஸ் கூட்டணி தொடருகிறதா அல்லது முறிந்துவிட்டதா? என்று கேள்வி எழுந்துள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
தெரியாத நம்பரில் Wedding Invitation வருகிறதா.. உஷார் !

திடீரென WhatsApp-ல் ஒரு Wedding Invitation. தெரியாத நம்பர் என்றாலும், எவனோ பழைய ஃபிரண்டா இருக்கும் என்ற யோசனையில், அந்த Wedding Invitation-ஐ ஓப்பன் பண்ணி பார்த்தா அவ்ளோதான். போனில் உள்ள தனிநபர் தரவுகள், பணம் என அனைத்தையும் அபேஸ் பண்ணி விடுகிறார்கள். ஸ்மார்ட்போன் மூலம் நடக்கும் புதிய திருட்டு இது. உ.பி.,யில் இவ்வாறு மெசேஜ் அனுப்பி 15 பேர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். உஷாராக இருங்க மக்களே!
News March 31, 2026
திமுகவுடன் இணைந்தார்.. கடைசி நேரத்தில் அறிவித்தார்

TN வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் தொடர, திமுகவுக்கு ஆதரவாக மக்கள் விடுதலை கட்சி வாக்கு சேகரிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் முருகவேல் ராஜன் கூறியுள்ளார். ராமதாஸால் அரசியலுக்குள் வந்த இவர், வந்தவாசியின் MLA-ஆக இருந்திருக்கிறார். பின்னர், 2002-ல் பாமகவில் இருந்து விலகி, மக்கள் விடுதலை கட்சியை நிறுவினார். 2021-ல் திமுக கூட்டணியில் இடம்பெற்று, நிலக்கோட்டையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.


