News June 17, 2024
EVM குறித்து செய்தி வெளியிட்ட ஊடகம் மீது வழக்கு

மகாராஷ்டிராவில் OTP மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்ட ‘மிட் டே’ செய்தி ஊடகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள EVM இயந்திரங்களில் இணைய இணைப்பு மற்றும் ப்ளூ டுத் உள்ளிட்ட வயர்லெஸ் இணைப்புகள் இல்லை எனவும், இதனால், ஹேக்கிங் சாத்தியங்களுக்கு முற்றிலும் வாய்ப்பில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News March 14, 2026
SPORTS 360°: ஹாக்கியில் இந்தியா அபாரம்

*KKR அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக ZIM வீரர் பிளெஸ்ஸிங் முசரபானி சேர்ப்பு *காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலகல் *மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை குவாலிஃபையர்ஸில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது *காயம் காரணமாக சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் இருந்து சாத்விக்-சிராக் இணை விலகல் *வங்கதேசத்திற்கு எதிரான 2-வது ODI-ல் பாகிஸ்தான் 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
News March 14, 2026
ராசி பலன்கள் (14.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 14, 2026
Adobe நிறுவன CEO சாந்தனு நாராயண் விலகல்

உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான Adobe-ன் CEO பொறுப்பில் இருந்து சாந்தனு நாராயண் விலகியுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர், 18 ஆண்டுகளாக அந்த பொறுப்பில் திறம்பட செயலாற்றினார். பதவி விலகுவதாக அறிவித்த உடனே Adobe-ன் பங்குகள் 7% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன. இவரது தலைமையின் கீழ் Photoshop, Premiere Pro, Illustrator, InDesign போன்றவை உலகத் தரமான படைப்புகளாக மாறின.


