News March 18, 2024
மதுரை அருகே 7 பேர் மீது வழக்கு

மேலூர் அருகே கரையிப்பட்டியில் உள்ள ஒரு கோவிலின் பூசாரியாக உள்ளவர் சின்னையா. அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் மது போதையில் நேற்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதை சின்னையாவின் மருமகன் சிவா தட்டி கேட்க, அவரை பீர் பாட்டிலால் ரஞ்சித் தலையில் தாக்கி மண்டையை உடைத்தார். இது தொடர்பாக ரஞ்சித், சுமதி, கார்த்திகா உட்பட 7 பேர் மீது கீழவளவு போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News April 8, 2025
மதுரையில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி தற்கொலை

மதுரை ஊமச்சிக்குளம் பகுதியில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி துரைசிங்கம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த துரைசிங்கம் நேற்று வீட்டிற்குள் சடலமாக கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து உடலை மீட்ட காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தில், அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
News April 8, 2025
அழகர் கோவில் சித்திரை திருவிழா செய்தி குறிப்பு வெளியீடு

மதுரையில் சித்திரரை திருவிழாவை முன்னிட்டு வரும் 27ம் தேதி காலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் வைத்து சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த விழா மற்றும் ஆயிரம் பொன் சப்புரம் தலையங்கம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. தொடர்ந்து மதியம் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மதுரை,வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்திலும் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறவுள்ளது.
News April 8, 2025
மதுரையில் ஏப்.10ல் இறைச்சி விற்க தடை

மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 10) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: தடையை மீறி விற்பனை செய்தால் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதாரச் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.