News October 11, 2025
ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை

தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்து சென்றால், 3 ஆண்டுகள் சிறை (அ) ₹1,000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. மேலும், விதிமீறல்களால் ஏற்படும் இழப்பு, சேதத்திற்கு சம்பந்தப்பட்டவரே பொறுப்பு. பயணிகள் சந்தேகத்துக்குரிய பொருள்களை கண்டால் 139 என்ற எண்ணிலோ (அ) RPF, TTE, ரயில் நிலைய அலுவலர்களிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 11, 2025
காதலுக்கு வயதில்லை: 21 வயது மூத்தவரை மணந்த இளைஞர்

ஜப்பானில் தன்னை விட 21 வயது மூத்தவரான மிடோரி(51) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார் டோமியோகா (30) என்ற இளைஞர். ஆரம்பத்தில் இந்த காதலை மிடோரியின் குடும்பத்தினர் எதிர்த்த நிலையில், டோமியோகா தனது விடாமுயற்சியால் அவர்களை சம்மதிக்க வைத்துள்ளார். தற்போது மிடோரியின் மகளுக்கு தந்தையானது மட்டுமன்றி, அவரின் 4 பேரக்குழந்தைகளுக்கு தாத்தாவாகவும் மாறியுள்ளார்.
News October 11, 2025
டிரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் ராணுவம்

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு வான் பாதுகாப்பில் இந்திய ராணுவம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், ‘SAKSHAM’ எனும் டிரோன் எதிர்ப்பு அமைப்பை இந்திய ராணுவம் உருவாக்கி வருகிறது. எதிரிநாட்டு டிரோன்களை கண்காணித்து, வழிமறித்து, தாக்கி அழிக்கும் இந்த அமைப்பு, முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்படுகிறது. அடுத்த ஒரு ஆண்டில் இந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 11, 2025
தீபாவளி பரிசாக ₹18,000.. தமிழக அரசு HAPPY NEWS

தீபாவளியையொட்டி கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, தொடக்க வேளாண் கூட்டுறவு, நகர கூட்டுறவு, ஊரக வளர்ச்சி வங்கிகளின் பணியாளர்களுக்கு தலா ₹18,000 வழங்கப்படும். மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு தலா ₹24,000 வழங்கப்படும். மாநில தலைமை கூட்டுறவு வங்கி அலுவலர்களுக்கு தலா ₹30,000 கிடைக்கும்.