News April 22, 2025
மீனவர்கள் படகு மீது மோதிய சரக்கு கப்பல்!

கன்னியாகுமரியின் முட்டம் அருகே தனியார் மீன்பிடி துறைமுகத்தில் படகு மீது கப்பல் மோதியது. கடியப்பட்டணத்தைச் சேர்ந்த அருள் ரமேஷ் என்பவரின் விசைப்படகில் 21 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். சுமார் 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பெரிய சரக்கு கப்பல் ஒன்று படகு மீது மோதியது. நல்வாய்ப்பாக மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பியுள்ளனர்.
Similar News
News December 6, 2025
டாஸ்மாக் கடைகள் 8 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

2026-ம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாள்களை TN அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜன.16 (திருவள்ளுவர் தினம்), ஜன.26 (குடியரசு தினம்), பிப்.1 வள்ளலார் நினைவு நாள்), மார்ச் 31 (மஹாவீர் ஜெயந்தி), மே 1 (தொழிலாளர் தினம்), ஆக.15 (சுதந்திர தினம்), செப்.26 (மிலாடி நபி), அக்.2 (காந்தி ஜெயந்தி) நாள்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்காது. டாஸ்மாக் மூலம் தினமும் ₹100 கோடி அளவிற்கு அரசு வருவாய் ஈட்டி வருகிறது.
News December 6, 2025
தமிழகத்தின் அதிசய பஞ்சபூத கோயில்கள்

தமிழகத்தில் உள்ள பஞ்சபூத கோயில்கள் நிலம், நீர், அக்னி, காற்று, ஆகாயம் என பிரபஞ்சத்தின் பஞ்ச மூலங்களை பிரதிபலிக்கின்றன. ஆன்மிக சக்தி நிறைந்த இந்த கோயில்கள், பக்தர்களுக்கு அற்புத அனுபவத்தை தரும். பஞ்ச பூத கோயில்கள் எவை, அமைந்துள்ள இடம் ஆகியவற்றை மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதில், எந்த கோயிலுக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்கள்? எங்கு போக ஆசை? கமெண்ட்ல சொல்லுங்க.
News December 6, 2025
மாரடைப்பு ஏற்பட்டால் உடனே இதை செய்யுங்க

மாரடைப்பு என்பது சமீபகாலங்களில் எல்லா வயதினருக்கும் ஏற்படுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது, நெஞ்சில் கடுமையான வலி, மூச்சுத் திணறல், மயக்கம், அதிகப்படியான வியர்வை போன்றவை இருக்கும். இதுபோன்ற சுழலில் நீங்கள் தனியாக இருந்தால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


