News October 7, 2024

‘மகாராஜா’ இயக்குநருக்கு கார் பரிசு!

image

‘மகாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு படக்குழுவினர் சொகுசு காரை பரிசளித்தனர். விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமாக வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், வித்தியாசமான திரைக்கதை காரணமாக ₹100 கோடி வசூல் ஈட்டி அசத்தியது. அதேபோல, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பல சாதனைகளை படைத்தது.

Similar News

News August 5, 2025

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

image

சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகு திசை, கேது திசை நேரமாக இருந்தால் அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?

News August 5, 2025

சேலம், தென்காசியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

image

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை (ஆகஸ்ட் 6) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், வரும் 23-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) சங்கரன்கோவில் உள்ள சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News August 5, 2025

₹17,000 கோடி லோன் மோசடி: ED வலையில் அனில் அம்பானி

image

லோன் மோசடி வழக்கில், அனில் அம்பானி இன்று ED விசாரணைக்கு ஆஜரானார். ₹17,000 கோடி மோசடி தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. யெஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் சுமார் ₹78,000 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு, அந்தப் பணம் வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணமெல்லாம் எங்கு சென்றிருக்கும்?

error: Content is protected !!