News March 3, 2025
கேப்டன் பதவி விலகல்: பட்லரின் உருக்கமான பதிவு!

இங்கி. கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளை அடுத்து, கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகினார். இது குறித்து உணர்ச்சிவசத்துடன் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘தலைமைத்துவ பொறுப்புகளிலிருந்து சோகத்துடன் விலகுகிறேன். விலக இதுவே சரியான நேரம். ஆதரவு தந்த அனைத்து வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும், என் மனைவி லூயிஸுக்கும் நன்றி. இவர்களே என் பயணத்தின் தூண்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 3, 2025
காதலன் கவலைக்கிடம்.. எலி பேஸ்ட் காதலி கைது

விழுப்புரத்தில் காதலனை <<15637846>>கொடூரமாக கொலை செய்ய முயற்சி<<>> செய்த காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டக்கல்லூரி மாணவர் ஜெயசூர்யாவுக்கு காதலி ரம்யா தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட காதலன் சென்னை ஸ்டான்லி ஹாஸ்பிடலில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, தனது குடும்பத்துடன் தலைமறைவான ரம்யாவை போலீசார் கைது செய்தனர்.
News March 3, 2025
இயர்போன் பயன்படுத்துவோரா நீங்கள்!

அதிக ஒலியிடும் சாதனங்களை பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சாதாரண ஒலி அளவில் இருந்தாலும், புளுடூத் இயர்போன், ஹெட்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தேவைப்பட்டால் 50 டெசிபல் ஒலிக்கும் குறைவாக இருக்கும் இயர்போனை பயன்படுத்தவும். இயர்போனை 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஹெட்போன் பயன்பாட்டை குறைக்க நீங்கள் என்ன செய்வீங்க கமெண்ட் பண்ணுங்க
News March 3, 2025
போப் உடல்நிலை எப்படி இருக்கிறது? வாடிகன் விளக்கம்

நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கத்தோலிக்க மதகுரு போப் பிரான்சிஸ்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையில், 88 வயதான போப் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.