News March 23, 2025
CAPTAIN’S KNOCK… அதிரடி காட்டிய ருதுராஜ்

எம்ஐ அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 26 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அசத்தினார். 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் அதிரடியாக அவர் அரைசதத்தை கடந்த நிலையில், விக்னேஷ் புதுர் ஓவரில் ஆட்டமிழந்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 155 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிஎஸ்கே அணி 8 ஓவர்களில் 79 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Similar News
News March 27, 2025
சசிகுமார் எடுத்துள்ள புதிய அவதாரம்

சுப்பிரமணியபுரத்தில் நடிகராகவும் இயக்குநராகவும் களமிறங்கிய சசிகுமார், தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர். தற்போது ‘டூரிஸ்ட் பேமிலி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் மே ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே அமேசானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற வதந்தி என்ற கிரைம் திரில்லர் வெப் தொடரின் 2ஆம் பாகத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 27, 2025
சீனாவின் ராஜதந்திரம்.. டிரம்பால் வந்த வினை

டிரம்ப் நிர்வாகத்தால் சமீபத்தில் வேலைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களை சீன உளவு அமைப்புகள் டார்கெட் செய்வது தெரிய வந்துள்ளது. நிதி நெருக்கடியில் இருக்கும் அவர்களை போலியான நிறுவனங்கள் மூலம் பணியில் அமர்த்தி, அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை பெற முயற்சிப்பதாக USA புலனாய்வு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் குறித்து தங்களுக்கு தெரியாது என சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
News March 27, 2025
முதல் வெற்றியை முத்தமிட்ட கொல்கத்தா அணி!

ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதல் வெற்றியை கொல்கத்தா பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி வீரர்கள் யாரும் பெரியளவில் ரன் அடிக்கவில்லை. எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் நிதானமாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் 97* ரன்கள் விளாச, அந்த அணி எளிதில் வென்றது.