News April 16, 2025
கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு காயம்

DCக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து RR கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார். 189 என்ற இலக்கை துரத்திய அவர், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் 31 ரன்கள் எடுத்திருந்த போது, போட்டியின் 5.3ஆவது பந்தில் காயம் ஏற்பட்டது. விப்ராஜ் வீசிய அந்த பந்து ஃபுல்டாஸாக வந்ததால், அதனை ஓங்கி அடித்தபோது சாம்சனுக்கு வலி ஏற்பட்டு வெளியேறினார்.
Similar News
News October 14, 2025
BREAKING: இரவில் விஜய்யை சந்தித்தார்

கடந்த 15 நாள்களாக தலைமறைவாக இருந்த தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் வெளியே வந்தார். செப்.27-ம் தேதி கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், N.ஆனந்த், நிர்மல்குமார் தலைமறைவாகினர். தற்போது, கரூர் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், முதல் ஆளாக வெளியே வந்த நிர்மல்குமார், இரவு விஜய்யை சந்தித்து 1 மணி நேரத்திற்கு ஆலோசனை நடத்தியுள்ளார்.
News October 14, 2025
கோயிலுக்குச் செல்லும் பொழுது.. இத மறக்காதீங்க!

எப்போதும் கோயிலுக்கு செல்லும் போது, சில விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் *பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது *வெறும் கையுடன் செல்லாமல், குறைந்தபட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும் *குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது * கைலி, தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது *ஈர துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. SHARE IT.
News October 14, 2025
இன்று முதல் 4 நாள்களுக்கு சட்டசபை கூட்டம்

தமிழ்நாடு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டத்தில் சமீபத்தில் உயிரிழந்த முக்கியஸ்தர்கள், கரூர் துயரத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். நாளை முதல் 2025-26-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.