News December 8, 2024

தொடர்ந்து சொதப்பும் கேப்டன் ரோஹித்

image

இந்திய அணி NZ, AUS அணி பவுலர்களிடம் திணறி வரும் நிலையில், ரோஹித்தின் மோசமான பார்ம் இந்திய அணிக்கு பெரும் தலைவலி ஆக மாறியுள்ளது. கடைசி 12 இன்னிங்ஸில் அவர் முறையே 3, 18, 11, 8, 0, 2, 52, 23, 8, 6, 3, 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 8 முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியுள்ளார். ஏற்கனவே டி20க்கு விடை கொடுத்த ரோஹித் தற்போது ஓடிஐ, டெஸ்டில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 4, 2026

குமரி: சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

image

குமரி மக்களே, <>இங்கு க்ளிக் செய்து<<>> 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் பதிவு செய்தால் View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க…

News March 4, 2026

ஈரானின் உயர் தலைவரே டார்கெட்: இஸ்ரேல் எச்சரிக்கை

image

ஈரானின் உயர் தலைவராக யார் வந்தாலும் அவரை காலி செய்வதுதான் எங்களது இலக்கு என இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார். இந்த பணியை முடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என இஸ்ரேல் படைக்கு நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரானின் உயர் தலைவராக கமேனியின் மகன் முஜ்தபா கமேனி பதவியேற்றுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

திருச்சி ரயில்வேயில் இந்தி பெயரை அகற்ற ஒப்புதல்

image

திருச்சி ரயில்வே நுழைவாயிலில் இந்தி பெயர் இடம்பெற்றதற்கு <<19295250>>CM ஸ்டாலின்<<>> உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திருச்சி ரயில்வே அலுவலகம் முன் திமுகவினர் போராட்டமும் நடத்தினர். இந்த விவகாரம் பெரும் பூதாகரமான நிலையில், இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். கல்வெட்டில் உள்ள இந்தி பெயர் உடனடியாக மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!