News April 1, 2025
ஆங்கிலம் பேச வரலையா? அரசு பள்ளியில் விரைவில் புதுதிட்டம்

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆங்கிலத்தில் பேச சிரமப்படுகின்றனர். இந்த குறையை போக்க மாநில அரசு, அடுத்த கல்வியாண்டில் ஆங்கில தொடர்புதிறன் பயிற்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆங்கிலத்தில் திறமை வாய்ந்த, புதிய வழிகள் மூலம் போதிக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்கள் மூலம் 6-8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில தொடர்புதிறன் பயிற்சியை கொடுக்க அரசு பரிசீலித்து வருகிறது.
Similar News
News January 7, 2026
அரியலூர்: பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் ஆன்லைன் பஸ் பாஸ் பெற இணையவழி பதிவு செய்யும் முகாம் நாளை முதல் 31-ம் தேதி வரை அரியலூர் மாவட்ட ஆட்சியரக தரைத்தளத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
கரூர்: திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் உயிரிழப்பு!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த வினோத்குமார் (31) என்ற இளைஞர், மருத்துவமனையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாத விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பசுபதிபாளையம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 7, 2026
12-ம் தேதிக்கு தள்ளிப்போகிறதா ‘ஜனநாயகன்’?

<<18783030>>தணிக்கை குழு<<>> சான்றிதழ் கிடைக்காமல், ‘ஜனநாயகன்’ படம் தவித்து வருகிறது. இன்று ஐகோர்ட்டில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், 9-ம் தேதி படம் வெளிவருமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில்தான், Bookmyshow-ல் படத்திற்கான முன்பதிவு 12-ம் தேதி முதல் தொடங்கியிருக்கும் நிலையில், ரசிகர்கள் படம் அன்றைய தேதிக்கு தள்ளிபோகிறதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கெல்லாம் விடை இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.


