News May 7, 2025
RTI மூலம் அரசு ஊழியர்களின் சொத்துகளை கேட்க முடியாது?

அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழக தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார். இதற்கு பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
டிட்வா புயல்.. இலங்கைக்கு தோள் கொடுத்த இந்தியா

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 53 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சாகர்பந்துவின் ஒரு பகுதியாக Chetak, MI-17 ஹெலிகாப்டர்கள் இலங்கை விமானப்படையுடன் இணைந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. பல நாடுகளை சேர்ந்த 150-க்கும் பேரை மீட்க இந்தியா உதவியுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
News December 2, 2025
தங்கம் விலை குறைந்தது!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக சரிவை சந்தித்து வருகிறது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $6.62 குறைந்து $4,212-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி 1 அவுன்ஸ் $0.07 உயர்ந்து $56.79 ஆக உள்ளது. இந்திய சந்தையில் நேற்று, தங்கம் சவரனுக்கு ₹96,560-க்கு விற்பனையானது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் விலை குறைவால் இன்று நம்மூரிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
News December 2, 2025
தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் காங்.,

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்தி வரும் திமுக, மறுபுறம் தொகுதிப் பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட காங்., கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு, நாளை மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளது. எவ்வளவு தொகுதிகள், என்னென்ன தொகுதிகள் என்பதை இறுதி செய்ய, காங்., தீவிரமாக இறங்கியுள்ளது.


