News March 27, 2024
தோனி மீதான அன்பை புரிந்து கொள்ள முடியவில்லை

தோனி மீதான ரசிகர்கள் அன்பு வியப்பளிப்பதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “தோனி வீரர்களின் அறையில் நிற்பதை கேமராமேன் காட்டுகிறார். அதை பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். தோனியின் மீதான இந்த அன்பை என்னை புரிந்துகொள்ள முடியவில்லை. எப்படி அவருக்கு மட்டும் இது நடக்கிறது என தெரியவில்லை” எனக் கூறினார். முன்னதாக, பல நேரங்களில் இவர் தோனியை விமர்சித்திருந்தார்.
Similar News
News April 19, 2025
திருமணத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றமில்லை: DL HC

திருமணத்தை மீறிய உறவு கிரிமினல் குற்றமில்லை என்று டெல்லி ஹைகோர்ட் (DL HC) தெரிவித்துள்ளது. மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி, கணவர் தொடுத்த மேல்முறையீட்டு மனு மீது HC தீர்ப்பளித்தது. அப்போது, ஏற்கெனவே இதேபோன்ற இன்னொரு வழக்கில் உச்சநீதிமன்றம் திருமணத்தை மீறிய உறவு தனிநபர் ஒழுக்கம் சார்ந்த பிரச்னை, கிரிமினல் குற்றமில்லை என கூறியிருப்பதை சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்தது.
News April 19, 2025
மீண்டும் வருகிறது ‘சங்கமித்ரா’

படு ஜோராக தொடங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட முக்கியமான படங்களுள் சங்கமித்ராவும் ஒன்று. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இப்படம் பிரமாண்டமாக உருவாகும் என்று 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்திருக்கும் சுந்தர்.சி, அடுத்த ஆண்டு இப்படத்தின் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
News April 19, 2025
2026 தேர்தலில் கடும் போட்டி: மாலினி பார்த்தசாரதி

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 2 திராவிட கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என்று மாலினி பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். இபிஎஸ்சை அவர் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2026 தேர்தலில் வெற்றி உறுதி என்று இபிஎஸ் நம்புகிறார், சட்டப்பேரவைத் தேர்தலில் காத்திருக்கும் போட்டிக்காக நன்கு தயார் நிலையில் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.