News March 31, 2025
ஏசி இல்லாம தூங்க முடியலையா?

வெயில் காலம் வந்தாலே பறிபோவது நிம்மதியான தூக்கம் தான். இருக்கும் சூட்டுடன் ஃபேன் காற்றின் சூடும் சேர்ந்தால் தூங்குவது சிரமம் தான். இதற்கு இந்த எளிய வழியை முயலலாமே. டேபிள் ஃபேன் முன்பாக ஐஸ் நிரம்பிய கிண்ணத்தை வைத்துவிட்டால், பேனில் இருந்து வெளிப்படும் காற்று ஐஸின் குளிர்ச்சியை அறைக்குள் பரவவிடும். ஐஸ் உருகினாலும், குளிர்ந்த நீர் தொடர்ந்து அந்த குளிர்ச்சியை அளிக்கும். இதனால் நிம்மதியாக உறங்கலாம்.
Similar News
News April 1, 2025
900 மருந்துகளின் விலை உயருகிறது!

நீரிழிவு நோய், இதய நோய்கள் உள்ளிட்ட சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் 900 மருந்துகளின் விலை 1.74% இன்று முதல் உயருகிறது. ரசாயனங்கள், உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள NPPA அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மருந்துகள் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டும் மருந்துகள் விலை உயருகிறது. Ex. வைரஸ் தடுப்பு மருந்தான Acyclovir 200mg 1 மாத்திரைக்கு ₹7.74, 400mg 1 மாத்திரைக்கு ₹13.90 உயருமாம்.
News April 1, 2025
மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி… மருமகன் கைது!

திருப்பத்தூர் அருகே உயிரோடு இருக்கும் மாமியாருக்கு இரங்கல் போஸ்டர் டிசைன் செய்து மனைவி, உறவினர்களுக்கு அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசனுடன் சண்டையிட்டு, அவரது மனைவி தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால், மனைவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துவரும் அவர், தற்போது இந்த வேலையை பார்த்துள்ளார். மனைவி அளித்த புகாரில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்.
News April 1, 2025
சிஎஸ்கே ஜெயிக்க இதை பண்ணணும்: சீக்கா டிப்ஸ்!

நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே, அடுத்த 2 போட்டிகளில் பரிதாபமாக தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், ஜேமி ஓவர்டனுக்கு பதிலாக அணியில் கான்வே இடம் பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார். பவர்பிளே ஓவர்களில் அஸ்வின் பந்துவீசுவதை தவிர்க்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். சீக்கா டிப்ஸ் பலன் அளிக்குமா?