News August 22, 2025
ரேஷன் கார்டில் இனி பொருள்கள் வாங்க முடியாதா?

ஏழைகளுக்கு மானிய விலை உணவு தானியத்துடன், 5 கிலோ இலவச தானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வசதியான பலரும் இச்சலுகை பெறும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். இதனை கண்டறிந்து நீக்கும் வகையில், வருமானவரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட வசதியானோரின் பெயர்களை கண்டறிந்து நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பலரின் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
Similar News
News April 1, 2026
கோவை வடக்கில் அண்ணாமலை போட்டியா?

சென்னையில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய நயினார் நாகேந்திரன், வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெற்றுள்ளது என்றார். மேலும், அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை வடக்கு தொகுதியில் அவர் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
News April 1, 2026
தவெக வேட்பாளர் மீது பாலியல் புகார்.. பின்னணி என்ன?

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் (எ) குட்டி, பாலியல் தொல்லை அளித்ததாக அக்கட்சியின் பெண் நிர்வாகி அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது. இதனிடையே, சம்பந்தப்பட்ட பெண் நிர்வாகி தனது சகோதரி போன்றவர் எனவும், திமுகவின் தூண்டுதலின் பேரில் இந்த புகாரை அளித்துள்ளதாகவும் பிரகாசம் விளக்கம் அளித்துள்ளார். TNElection2026
News April 1, 2026
ஏப்ரலில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்!

நாளை (ஏப்ரல் 2) செவ்வாய் மீன ராசிக்குள் நுழைகிறது. ஏற்கெனவே, சூரியனும் மீன ராசியில் இருப்பதால், இந்த இரு கிரகங்களின் இணைப்பு மங்கள ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறதாம். இதனால், அனைத்து ராசியினர் வாழ்விலும் பெரும் தாக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த 3 ராசிகளுக்கு பெரும் ஜாக்பாட் அடிக்கவுள்ளதாம். அவை எந்த 3 ராசிகள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும்.


