News March 1, 2025
டிரம்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது: ஜெலென்ஸ்கி

டிரம்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். டிரம்புடன் மோதல் ஏற்பட்டாலும் அமெரிக்காவுடனான உறவைக் காப்பாற்ற முடியும் என்று அவர் நம்புகிறார். அமெரிக்கா சென்ற ஜெலன்ஸ்கியை டிரம்ப் பொது வெளியில் சாடியதால், அவர் விருந்தை புறக்கணித்து வெளியேறினார். இதற்கு டிரம்பிடம் ஜெலன்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியிருந்தார்.
Similar News
News March 1, 2025
ஸ்ரேயா கோஷல் X தள பக்கம் முடக்கம்

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் X தள பக்கம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிப்ரவரி 13ஆம் தேதி முதலே தனது X தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெயரிலுள்ள அந்த கணக்கில் வரும் எந்த செய்தியையும் நம்ப வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
News March 1, 2025
கோவிந்தாவுடன் டைவர்சா? மனைவி விளக்கம்

பாலிவுட் நடிகர் கோவிந்தாவும், மனைவி சுனிதா அகுஜாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்தி வெளியானது. இதுகுறித்து சுனிதா முதல் முறையாக பேட்டியளித்துள்ளார். அரசியலில் கோவிந்தா இருப்பதாகவும், இதனால் தனிப்பட்ட வாழ்க்கை,, அரசியலுக்கு என தனித்தனி வீடு இருப்பதாகவும், இதை வைத்து விவாகரத்து என எப்படி கூறலாம் என அவர் கூறியுள்ளார். 2 பேரையும் பிரிக்க யாராலும் முடியாது என்றும் சுனிதா தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
ரேஷன் கடைகளுக்கு இந்த மாதம் 6 நாட்கள் விடுமுறை

ரேஷன் கடைகளுக்கு இந்த மாதத்தில் (மார்ச்) 6 நாட்கள் விடுமுறை ஆகும். மாதத்தில் முதல் 2 வாரம் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும். அதன்படி, மார்ச் மாதத்தில் முதல் 2 வார வெள்ளி, ஞாயிறு என 4 நாட்கள் கடைகள் திறக்கப்படாது. அதேபோல், மார்ச் 30ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு ஆகும். அன்றைய தினத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ஆகும். மேலும், மார்ச் 31 ரம்ஜான் பண்டிகை. ஆதலால் அன்றைய தினமும் விடுமுறை.