News May 16, 2024
கேன் வாட்டர் விற்பனை அமோகம்

கோடை வெயிலால் தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில், கேன் வாட்டர் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில், தினசரி 3 கோடி லிட்டர் தண்ணீர் விற்பனையாவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், FSSAI உரிமம் இல்லாமல் 1,000க்கும் மேற்பட்ட போலி கேன் வாட்டர் ஆலைகள் செயல்படுவதாகவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News December 3, 2025
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, <<18449919>>திருவண்ணாமலை, கன்னியாகுமரி<<>> ஆகிய மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
இன்று 11 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் குடையை தவறாமல் கையுடன் எடுத்துச் செல்லுங்க மக்களே!
News December 3, 2025
இப்படியெல்லாம பூச்சிகள் இருக்கிறதா?

ஆச்சரியமான இந்த உலகில் பல்வேறு விசித்திரமான உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக பூச்சி இனங்கள், இப்படியெல்லாம் இருக்கின்றதா என்று நம்மை வியப்படைய செய்கின்றன. இந்தப் பூச்சிகள், இயற்கையாகவே இலைகள், பூக்கள், குச்சிகள் போன்ற தோற்றத்தில் உள்ளன. இந்த விசித்திரமான பூச்சிகள் என்னென்னவென்று, மேலா போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


