News June 26, 2024
கஞ்சா பயன்பாடு குற்றமாகாது: பிரேசில் நீதிபதி

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கஞ்சா வைத்திருப்பது குற்றமாகாது என பிரேசில் உயர்நீதிமன்ற நீதிபதி டோஃபோலி தெரிவித்துள்ளார். இது குறித்த விசாரணை கடந்த 2015 முதல் நடைபெற்று வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் 11 நீதிபதிகளில் மூவர் மட்டுமே குற்றமில்லை என்ற முடிவை எதிர்த்துள்ளனர். மருத்துவ பயன்பாட்டிற்காக ஒரு சில நாடுகளில் கஞ்சா பயன்படுத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Similar News
News November 27, 2025
ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்துகிறாரா விஜய்?

MLA பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், இன்று தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், KAS-ன் சொந்த மாவட்டமான ஈரோட்டில் அடுத்த மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோபியில், நவ.30-ல் EPS பரப்புரை மேற்கொள்ளவுள்ள நிலையில், விஜய்யும் கொங்கு மண்ணில் கால் பதிக்கவுள்ளார். இதற்கான அனுமதி வாங்கும் பணிகளை தவெகவினர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
News November 27, 2025
மாபெரும் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

சையது முஷ்டாக் அலி கோப்பையில், கேரள ஓப்பனர்கள் சஞ்சு சாம்சன் & ரோகன் குன்னும்மாள் முதல் விக்கெட்டுக்கு 177 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில், ரோஹன் 10 சிக்ஸர்களுடன் 121(60)* ரன்களை விளாச, சஞ்சு 51*(41) ரன்கள் அடித்தார். தொடர் வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப். இப்போட்டியில், ஒடிசா 20 ஓவரில் 176/7 ரன்கள் எடுக்க, கேரளா 16.3 ஓவரில் வெற்றி பெற்றது.
News November 27, 2025
தமிழக பாஜக தலைவர் மாற்றமா?

நயினாரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால், டெல்லிக்கு அழைத்த பாஜக தலைமை, அவருக்கு சில அறிவுரைகள் வழங்கியதாக தகவல் வெளியானது. இதனால் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு, நாராயணன் திருப்பதி மறுப்பு தெரிவித்துள்ளார். NDA கூட்டணி வெற்றி பெற்றுவிடுமோ என்ற பயத்தில், திமுக இதுபோன்ற வதந்தியை பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தலைவர் பதவியில் மாற்றமில்லை என்றும் அவர் கூறினார்.


