News March 17, 2024
வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள்

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் பாஜக கூட்டணி இறுதி செய்யப்படும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கூட்டணி அறிவித்தவுடன் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்படும் என்றார். மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பாஜக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நாங்கள் பட்டியல் கொடுக்கவும் தயார் என்றார்.
Similar News
News December 31, 2025
பொங்கல் பரிசு.. தித்திக்கும் செய்தி வெளியானது

பொங்கல் பரிசு பற்றிய அறிவிப்பு, புத்தாண்டு நாளில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜன.2-க்குள் டோக்கன்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். முற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பிற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசை விநியோகம் செய்திட ஏதுவாக இந்த டோக்கன்களை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News December 31, 2025
21 நாள்கள் விதி தெரியுமா?

நாளை புது வருடம் பிறக்கிறது. பிடிக்காத அல்லது கெட்ட பழக்கத்தை கைவிட வேண்டுமா? அல்லது புதிய விஷயம் ஒன்றை தினசரி வாடிக்கையாக்க வேண்டுமா? இதற்கு இந்த 21 நாள்கள் விதி கைகொடுக்கும். எந்த ஒரு விஷயத்தையும் தினசரி தொடர்ந்து 21 நாள்களுக்கு செய்தால், அது அப்படியே பழக்கமாகிவிடும் என்கிறது இந்த விதி. இதையே 90 நாள்கள் செய்தால், அது உங்கள் வாழ்க்கை முறையாகவே மாறிவிடும். ட்ரை பண்ணி பாருங்க.
News December 31, 2025
ஜனவரி 1 முதல் சம்பளம் உயருகிறது!

ஜனவரி 1-ம் தேதி முதல் 8-வது ஊதியக் குழு அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 20% – 35% வரை உயரலாம். கடந்த 2025 நவம்பரில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட நிலையில், உயர்த்தப்பட்ட சம்பளம் & ஓய்வூதியம் 2026 ஜனவரியிலிருந்து அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்த Official தகவல் வெளியாகவில்லை.


