News February 23, 2025
3 ஆண்டில் மாவட்டந்தோறும் கேன்சர் சிகிச்சை மையம்: PM

இன்னும் 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் 24 மணி நேர கேன்சர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, பட்ஜெட்டில் கேன்சர் சிகிச்சை தொடர்பாக வெளியான பல்வேறு அறிவிப்புகளை சுட்டிக்காட்டினார். அதில் கேன்சர் சிகிச்சை மருந்துகள் மலிவான விலையில் கிடைக்க செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறினார்.
Similar News
News February 23, 2025
மார்ச் 24, 25ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

மார்ச் 24, 25ம் தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில், மார்ச் 3ல் நாடாளுமன்றம் முன் தர்ணா நடத்தவும், மார்ச் 24, 25ல் வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
News February 23, 2025
3 மாவட்டங்களில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மார்ச் 4 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் மகா சிவாரத்திரிக்கும் (பிப்.26), மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழாவுக்கும் (மார்ச் 11) உள்ளூர் விடுமுறையாகும். இந்த 3 நாட்களுக்கு பதிலாக முறையே மார்ச் 8, மார்ச் 22, ஏப்ரல் 12 ஆகிய தினங்கள் வேலைநாட்களாக இருக்கும்.
News February 23, 2025
இமாலய சாதனை படைத்த விராட் கோலி

ODI போட்டிகளில் 14,000 ரன்களை தொட்ட மூன்றாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் 15 ரன்களை கடந்தபோது இந்த சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர் & குமாரா சங்ககாரா மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த ரன்களை சச்சின் 350 இன்னிங்சிலும், சங்ககாரா 378 இன்னிங்சிலும் தொட்ட நிலையில், கோலி வெறும் 287 இன்னிங்ஸ்களில் கடந்துள்ளார்.