News May 18, 2024
இங்கிலாந்து அரண்மனையை ஆட்டிவிக்கும் புற்றுநோய்

இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, பட்டத்து இளவரசராக இருந்த அவரது மகன் சார்லஸ் 2022ஆம் ஆண்டு மன்னராக மகுடம் சூடினார். ஆனால், சில மாதங்களிலேயே அவர் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானார். தற்போது அவர் அதில் இருந்து மீண்டு வரும் சூழலில், அவரது மருமகள் கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்கால ராணியான அவர், புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார்.
Similar News
News March 6, 2026
கூட்டிக் கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

1 முதல் 9-க்குள் ஏதாவது ஒரு நம்பரை நினைத்துக் கொள்ளுங்கள். அதை 3-ஆல் பெருக்குங்கள். அதில் வரும் விடையோடு 3-ஐ கூட்டுங்கள். அந்த விடையை மீண்டும் மூன்றால் பெருக்குங்கள். இப்போது உங்களுக்கு ஒரு இரட்டை இலக்க எண் கிடைத்திருக்கும். அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். இப்போது, உங்களுக்கு கிடைத்திருக்கும் விடை 9. சரியாக இருந்தால் ஷேர் பண்ணுங்க.
News March 6, 2026
PM KISAN திட்டத்தின் தவணை ₹2,000.. வந்தாச்சு HAPPY NEWS

PM KISAN திட்டத்தின் 22-வது தவணையை (₹2,000) மார்ச் 13-ம் தேதி டெபாசிட் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் அசாமில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் PM மோடி, இதற்கான நிதியை விடுவிக்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக, pmkisan.gov.in இணையதளம் சென்று Know Your Status ஆப்சன் மூலம் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.
News March 6, 2026
LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு

வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ்க்கு(LPG) தட்டுப்பாடு வராமல் இருக்க LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. LPG-க்கு தேவையான அனைத்து எரிவாயுவையும் 3 அரசு நிறுவனங்களுக்கு (IOC, BPCL, HPCL) மட்டும் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. ஈரான் போர் சூழலால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ள நிலையில், அதை தடுக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


