News April 28, 2024

கேன்சரைத் தொடக்கத்திலேயே கண்டறியலாம்

image

உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புற்றுநோயைத் தொடக்கத்திலேயே கண்டுகொண்டால் அதிலிருந்து எளிதாக விடுபடலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பசியின்மை, திடீரென உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் மிகவும் குறைதல், சாப்பிட தொடங்கியதுமே வயிறு நிரம்பிய உணர்வு ஆகியவை புற்றுநோயின் பரவலான அறிகுறிகளாகும்.

Similar News

News January 25, 2026

சேலத்தில் மாணவி உயிரிழப்பு.. CM ஸ்டாலின் இரங்கல்

image

ஓசூரைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, சேலத்தில் உள்ள கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி விளையாடிக்கொண்டிருந்த போது அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். மாணவியின் மறைவு செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ள CMஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

News January 25, 2026

பள்ளிகளில் ‘அயலி’ திரைப்படம்

image

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘அயலி’ வெப் சீரிஸை அரசுப் பள்ளிகளில் ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் சிறார் படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், ஜனவரியில் அயலி திரையிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2023-ல் வெளியான அயலி சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

News January 25, 2026

போலீஸ், பஸ் கண்டக்டர் விசில் வைத்திருக்க முடியாது: KAS

image

TN-ல் எங்கு பார்த்தாலும் விசில் சத்தம் ஒலிப்பதாக செங்கோட்டையன்(KAS) தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், இனிவரும் நாள்களில் போலீஸ், பஸ் கண்டக்டர்கள் விசில் வைத்திருக்க தடை வரலாம் எனவும் தெரிவித்தார். மேலும், திமுகவை ஒழிப்பதாக கூறிவிட்டு நபர் ஒருவருக்கு ₹1,000 கொடுத்து சில நாள்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தை நடத்தியதாக NDA கூட்டத்தை சாடினார்.

error: Content is protected !!