News March 17, 2024

ரத்து: திருப்பத்தூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் 18.03.2024 நாளை நடைபெறவிருந்த மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News January 18, 2026

திருப்பத்தூர்: பைக் விபத்தில் பலியான ராணுவ வீரர்

image

திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் அஜித்குமார்(28), விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது பைக் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். வாணியம்பாடி நோக்கிச் சென்றபோது சின்னக்கல்லுப்பள்ளி வளைவில் பைக் நிலைதடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். பின், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

News January 18, 2026

திருப்பத்தூரில் சோகம்: கார் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி!

image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சாமியார்மடம் பகுதியில், ஒரு வயதுக் குழந்தை ஹேமாஸ்ரீ கார் மோதிப் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. திருமலை என்பவரது உறவினர் அமர்நாத் காரைப் பின்னோக்கி எடுத்தபோது, விளையாடிக்கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாகச் சக்கரத்தில் சிக்கியது. பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 18, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.18) காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!