News March 17, 2024
மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடத்தை விதிகள் நேற்று (மார்ச் 16) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறாது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.எனவே பொதுமக்கள் தங்களது மனுக்களை ஆட்சியர் அலுவலக தரைதள நுழைவாயிலில் மனுக்கள் பெட்டியில் செலுத்துமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
வேலூர்: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. வேலூரில் மட்டும் 26 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 4, 2025
வேலூரில் லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது

பாகாயம் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.03) விருபாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் ஆந்திர சேர்ந்த சிட்டிபாபு (52), பாலகுமார் (55), சரவணன் (54) மற்றும் வெட்டுவாணத்தைச் சேர்ந்த வேல்முருகன் (52), கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரை போலீசார் வழக்கின் பெயரில் கைது செய்தனர்.
News November 4, 2025
வேலூரில் ரூ.414 கோடி நலத்திட்ட உதவிகள்!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (நவ.04) வேலூர் மாவட்டத்தில் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். மேலும் 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதை தொடர்ந்து 49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


