News September 5, 2024
கட்சி தாவினால் ஓய்வூதியம் ரத்து

கட்சித் தாவல் தடை சட்டத்தில் தகுதிநீக்கம் செய்யப்படும் MLA-க்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என இமாச்சல் காங்கிரஸ் அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. அம்மாநிலத்தில் 5 ஆண்டுகள் MLA-வாக பணியாற்றியவர்களுக்கு, மாதம் ரூ.36 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். அங்கு கடந்தாண்டு கட்சி மாறியதால் 6 CONG MLA தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். MLA-க்கள் கட்சி தாவுவதை தடுக்கும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
கோவை குண்டுவெடிப்பு: பறிபோன 58 உயிர்கள் REWIND

1998. பிப்.14. கோவை தொடர் குண்டுவெடிப்பால் தமிழகமே அதிர்ந்து போன தினம். இந்த சம்பவத்தில் 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 58 பேர் உயிரிழந்தனர். தேர்தல் பிரசாரத்துக்கு அத்வானி கோவைக்கு வரப் போகும் சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கொடூர குற்றத்தில் முக்கிய குற்றவாளியான சாதிக் (எ) டெய்லர் ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், பறிபோன 58 உயிர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்?
News July 10, 2025
பட்டாவில் அதிரடி மாற்றம்… விரைவில் புதிய நடைமுறை

இ- பட்டாவில் போட்டோவை இணைக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த திட்டத்தை கொண்டுவர இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். eservices.tn.gov.in இணையதளத்தில் மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு இ- பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம். SHARE IT.
News July 10, 2025
இந்தியாவுக்கு எதிராக 3,000 ரன்கள்.. ஜோ ரூட் புது சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 3,000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார். 93 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடியுள்ளனர். ஆனால் இதுவரை டெஸ்டில் 3,000 ரன்கள் விளாசியது இல்லை. ஆனால் ஜோ ரூட், லார்ட்ஸ் டெஸ்டில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதில் 10 சதங்கள், 13 அரைசதங்கள் அடங்கும்.