News March 17, 2024

குறை தீர் நாள் கூட்டம் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

image

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, பிரதி வாரம் திங்கட்கிழமை அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டமானது மறு தேதி அறிவிக்கும் வரை ரத்து செய்யப்படுவதாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 16) அறிவித்துள்ளார்.

Similar News

News October 28, 2025

விழுப்புரம்: PHONE தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

விழுப்புரம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<> கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 28, 2025

விழுப்புரம்: சுகாதார ஆய்வாளர் எடுத்த விபரீத முடிவு

image

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடி பாரதி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (38). விக்கிரவாண்டி பகுதியின் சுகாதார ஆய்வாளர் ஆவார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் ராஜலட்சுமி, சென்னைக்கு சென்ற நிலையில், சரவணன் தன் வீட்டில் மாலை 5:30 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 28, 2025

விழுப்புரம் ஆட்சியரின் அறிவிப்பு!

image

விழுப்புரம் மாவட்டம், விவசாயிகள் அக்டோபர் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 31.10.2025 அன்று காலை 11.00 மணியளவில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளும், விவசாயிகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!