News March 17, 2024
குறைதீர் கூட்டங்கள் ரத்து – ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19 இல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம்,மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம், மாதாந்திர மக்கள் தொடர்பு திட்ட முகாம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் போன்றவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது, என்றார்
Similar News
News November 6, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (05.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
News November 5, 2025
கிருஷ்ணகிரி மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள சிவன் கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
கிருஷ்ணகிரி: காவல்துறையின் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்ட உத்தனப்பள்ளி அருகே இன்று (நவ.05) லாலிக்கல் கிராமத்தில் உள்ள தனியார் மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது வந்த புகாரின் பேரில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வளையதளங்களில் பரப்ப வேண்டாம், என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.


