News August 13, 2024
சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகள் ரத்து

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய சி.வி.சண்முகம் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில், சரியான பிரிவுகள் சேர்க்கப்படவில்லை, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதை நிரூபிக்கவில்லை, FIRஇல் குறைபாடுகள் உள்ளன என்று கூறி உயர்நீதிமன்றம் வழக்குகளை ரத்து செய்தது.
Similar News
News March 10, 2026
நயினாருடன் பனிப்போரா? பாஜகவில் என்ன நடக்கிறது?

சமீபத்தில் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்துவிட்டு அந்த போட்டோக்களை X-ல் நயினார் பகிர்ந்திருந்தார். இதற்கு கமெண்ட் செய்த கே.பி.ராமலிங்கம், ஆன்மிகத்தில் மட்டுமல்ல தொண்டர்களின் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இருவருக்குள்ளும் பனிப்போர் உண்டாகியுள்ளதா என SM-ல் கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த KP ராமலிங்கம், தங்களுக்குள் எந்த அதிருப்தியும் இல்லை என கூறியுள்ளார்.
News March 10, 2026
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்: சு.சுவாமி

தொடர்ந்து 3-வது முறையாக PM நாற்காலியில் அமர்ந்துள்ள மோடி, USA அதிபர் டிரம்பை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என BJP மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எனக்கு தெரிந்த தகவல்களை தற்போது வரை நான் வெளியிடவில்லை; அப்படி தான் வெளியிட்டால் PM மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய அவை வழிவகுக்கும் என எச்சரிக்கும் தொனியில் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
News March 10, 2026
போர் காலத்தில் இவற்றை செய்தால் தப்பிக்கலாம்

இஸ்ரேல், USA தொடங்கிய போரால் தற்போது மேற்காசிய நாடுகள் பற்றி எரிகின்றன. இந்நிலையில் இதுபோன்ற ஒரு சூழல் வந்தால் எப்படி அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் சில டிப்ஸ் அளித்துள்ளனர். அவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். இது வெறும் தகவலுக்காக மட்டுமே. போர் வரப்போகிறதா என பதற்றமடைய வேண்டாம் மக்களே. SHARE.


