News June 17, 2024

மோடி குறித்த கேள்விக்கு கனடா பிரதமர் மழுப்பல் பதில்

image

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கொலை செய்யப்படுவதற்கு இந்தியா மீது கனடா பிரதமர் ட்ரூடோ குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், 2025இல் கனடாவில் நடக்கும் ஜி7 மாநாட்டுக்கு மோடியை அழைப்பீர்களா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அடுத்தாண்டு கனடா ஜி7 தலைமையேற்கும் போது அது குறித்து நிறைய பேச வேண்டியிருப்பதாக மழுப்பலாக பதிலளித்தார். மோடி அழைக்கப்படுவாரா, இல்லையா என நேரிடையாக பதிலளிக்கவில்லை.

Similar News

News April 2, 2026

IPL: இன்று KKR Vs SRH

image

IPL-ல், இன்று KKR, SRH அணிகள் கொல்கத்தாவில் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோற்றதால், முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளன. கொல்கத்தா ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகம் என்பதால் ஆட்டத்தில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் பறக்க வாய்ப்புள்ளது. எனவே, போட்டியில் சிறப்பாக பந்துவீசும் அணியே வெற்றிபெறும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். யார் ஜெயிக்க வாய்ப்புள்ளது?

News April 2, 2026

திமுகவுக்கு ஓட்டு கிடையாது: மீனவர் நல அமைப்பு

image

வரும் தேர்தலில் தங்களின் ஆதரவு திமுகவுக்கு இல்லையென தென்னிந்திய மீனவர் நல சங்கம் அறிவித்துள்ளது. 2021-ல் திமுக சார்பில் வெற்றிபெற்ற மீனவர் சமுக வேட்பாளருக்கு அமைச்சரவையில் இடமளிக்க கோரிக்கை வைத்ததாக தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் பாரதி தெரிவித்துள்ளார். ஆனால் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை, இம்முறை வாய்ப்பும் அளிக்காததால் திமுகவை புறக்கணித்து, மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவளிப்போம் என கூறியுள்ளார்.

News April 2, 2026

இன்றைய நல்ல நேரம்

image

ஏப்ரல் 2, பங்குனி 19 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்

error: Content is protected !!