News October 24, 2024
கனடா PM ராஜினாமா செய்ய அக்டோபர் 28 வரை கெடு

கனடா PM ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என அவரது சொந்த கட்சி MPக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொலைக்கு இந்தியா தான் காரணம் என ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் அதிருப்தியடைந்த MPக்கள், அவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், 28ஆம் தேதிக்குள் அவர் பதவி விலகாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.
Similar News
News November 28, 2025
இந்த 10 விஷயங்களை செய்யாதீங்க.. சட்டவிரோதம்

இந்தியாவில் சில செயல்கள் செய்வதற்கு உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவை, நாடு மற்றும் நாட்டு மக்களின் நலம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தடை செய்யப்பட்டுள்ளன. மீறினால் அது சட்டவிரோதமானது, தண்டனைக்குரியது. சட்டவிரோதமான 10 செயல்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
News November 28, 2025
நயினார் இப்படி பேசலாமா?

TN அரசியலில் நயினார் பேசிய கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது. ஓட்டுக்கு காசு கொடுப்பது கொடுங் குற்றம் என பல அரசியல் கட்சிகள் கூறி வரும் நிலையில், பொங்கலுக்கு ₹5,000 கொடுத்தால்தான் <<18410978>>மக்கள் ஓட்டுபோடுவாங்க<<>> என்பது போல நயினார் பேசியுள்ளார். மக்களுக்கு பணம் கொடுத்து திமுக வாக்குகளை வாங்குவதாக நயினாரே பலமுறை குற்றஞ்சாட்டியிருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது மாற்றி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
News November 28, 2025
செங்கோட்டையன் சென்ற விமானத்தில் கோளாறு.. பதற்றம்

சென்னையில் இருந்து செங்கோட்டையன் சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. கோவைக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென சிக்னல் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர், விமானம் மீண்டும் கோவைக்கு புறப்பட உள்ளது.


