News June 8, 2024

அயர்லாந்து அணியை வீழ்த்தியது கனடா

image

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: 13ஆவது லீக் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி கனடா அணி அபார வெற்றி பெற்றது. நியூ யார்க் மைதானத்தில் முதலில் விளையாடிய கனடா அணி, 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

Similar News

News September 24, 2025

தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்தின் உரிமை: ஐநா

image

ஐநா பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்னையை முதன்மையாக கொண்டு ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரெஸ் உரையாற்றினார். அதில் தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் சலுகை அல்ல, அது அவர்களின் உரிமை என திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பரஸ்பர ஒத்துழைப்புடன் அண்டை நாடுகளாக வாழ வேண்டும் என கூறிய அவர், 1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

News September 24, 2025

சிவாஜி கணேசன் பொன்மொழிகள்

image

*வெற்றி என்பது கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் விளைவு
*கலை என்பது மனிதர்களுக்குள் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவி
*மக்களின் கைதட்டல்கள்தான் ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது
*வாழ்க்கை ஒரு நாடகம், அதில் நாம் அனைவரும் நடிகர்கள்
*ஒரு நடிகன் என்பவன், சமூகத்தில் நடப்பவற்றை அவனுடைய நடிப்பின் மூலம் பிரதிபலிப்பவன்

News September 24, 2025

வெட்கத்தில் சிவந்த ஷில்பா மஞ்சுநாத் PHOTOS

image

எமன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷில்பா மஞ்சுநாத், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் மூலம் பிரபலமானார். இவருக்கு ‘கண்ணம்மா’ என்ற பாடல் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளம் அமைந்தது. இவர், தனது க்யூட்டான போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வெட்கத்தில் சிவந்த ஷில்பா மஞ்சுநாத்துக்கு ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!