News April 9, 2024
பத்து நிமிடங்கள் முன்னதாக எழலாமே…

காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள். உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்த பழக்கம் உதவும். உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். வாழ்க்கையின் ஆக சிறந்த ரகசியம் நேரத்தை திறம்பட கையாள்வதே ஆகும்.
Similar News
News March 24, 2026
மோடி அரசை விட PAK ராஜதந்திரங்கள் மேல்: ஜெய்ராம்

US-ஈரான் இடையே PAK மத்தியஸ்தம் செய்வது உண்மையெனில் அது இந்தியாவுக்கு பின்னடைவு என காங்., MP ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இதற்கெல்லாம் தன்னைத்தானே விஷ்வகுரு என சொல்லும் நபரே காரணம் என்ற அவர், Op.Sindoor-க்கு பிறகு PAK-ன் ராஜதந்திரங்கள் மோடி அரசை விட மேலானதாக இருந்தது என விமர்சித்துள்ளார். மேலும், ஈரான் போருக்கு 2 நாள்கள் முன்பு மோடி இஸ்ரேல் சென்றது வரலாற்றிலேயே மோசமான முடிவு எனவும் சாடியுள்ளார்.
News March 24, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

ஆபரணத் தங்கம் விலை <<19461962>>சவரனுக்கு ₹2,720<<>> குறைந்த நிலையில், வெள்ளி விலையும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹10 குறைந்து ₹240-க்கும், கிலோ வெள்ளி ₹2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று காலை நேர வர்த்தகத்தில் கிலோவுக்கு ₹15,000 குறைந்து ₹2,35,000-க்கு விற்பனையானது. பின்னர், இரவில் ₹15,000 அதிகரித்த நிலையில், மீண்டும் ₹10,000 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
News March 24, 2026
மக்களை காக்க PM முதலில் தயாரா? CM ஸ்டாலின்

மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து மக்களை காக்க பல முறை வலியுறுத்தியும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என CM ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள் தயாராக இருக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் PM மோடி பேசியதை விமர்சித்த அவர், மக்களை காக்க நீங்கள் முதலில் தயாரா என கேட்டுள்ளார். மேலும், தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா? நாட்டு மக்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


