News June 10, 2024
உணவு அருந்தியதும் உடற்பயிற்சி செய்யலாமா?

உணவு அருந்தியதும் உடற்பயிற்சி செய்யலாமா? கூடாதா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. இதற்கு உடல்நல ஆலோசகர்களும், பயிற்சியாளர்களும் சில ஆலோசனைகளை அளித்துள்ளனர். அதாவது, முழு உணவு அருந்தியதும் 2 முதல் 3 மணி நேரம் காத்திருந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும், நொறுக்குத் தீனி சாப்பிடும்பட்சத்தில், 30-60 நிமிடங்கள் பொறுத்திருந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News November 11, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது

சர்வதேச சந்தையில் கடந்த 2 வாரங்களாக மந்த நிலையில் காணப்பட்ட தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 125 டாலர்கள்(₹11,082) அதிகரித்துள்ளது. இதனால், தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $4,126 ஆக உள்ளது. வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $50-ஐ கடந்துள்ளது. இதனால், நம்மூர் சந்தையில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
News November 11, 2025
National Roundup: PM மோடி இன்று பூடான் பயணம்

*பிஹாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல். *பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிப்பு. *PM மோடி இன்று பூடான் பயணம். *டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை. *டெல்லி கார் குண்டு வெடிப்பிற்கு ஜப்பான், பிரிட்டன், அர்ஜெண்டினா, மாலத்தீவு இரங்கல். *மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த 197 இந்தியர்கள் நாடு திரும்பினர்.
News November 11, 2025
சுண்டைக்காய் சாப்பிட்டால் என்ன நன்மைகள்?

நம்ம வீட்டில் அம்மா அடிக்கடி சுண்டைக்காய் வறுவல் அல்லது குழம்பு வைப்பாங்க. சுலபமாக கிடைக்கும் இதில், பல்வேறு நன்மைகள் உள்ளன. நம்ம ஊர்ல இதுக்கு பலரும் அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை. ஆனா இது உண்மையிலேயே எல்லோருடைய வீட்டின் கிச்சன் டேபிளில் இருக்க வேண்டிய ஒன்று. இதன் நன்மைகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


