News April 22, 2025
சொந்த வீடு கட்ட முடியுமா? கலக்கத்தில் மிடில் கிளாஸ்

தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை ஒரே அடியாக யூனிட்டுக்கு ₹1,000 வரை உயர்கிறது. இதற்கு தமிழக அரசு அனுமதியளித்திருப்பதால் சொந்த வீடு கட்டுபவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். யூனிட் ₹4,000க்கு விற்று வந்த ஜல்லி, இனி ₹5,000க்கு விற்கப்படும். எம்.சாண்ட் விலையும் ₹6,000 ஆக உயர்கிறது. இதனால் சொந்த வீடு கட்ட நினைப்போரின் கனவு, கனவாகவே முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹4,800 குறைந்தது

தங்கம் விலை <<18989965>>நேற்று<<>> வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், இன்று (ஜன.30) குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹600 குறைந்து ₹16,200-க்கும், சவரனுக்கு ₹4,800 குறைந்து ₹1,29,600-க்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது.
News January 30, 2026
பிப்.1 அன்று ஏன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது?

இந்தியாவில் பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். சுதந்திரத்திற்கு பிறகும் இதுவே நடைமுறையில் இருந்தது. ஆனால், 2017-ல் அப்போதைய FM அருண் ஜெட்லி, பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார். ஏப்ரலில் தொடங்கும் நிதியாண்டுக்கு தேவையான திட்டமிடல்களுக்கு போதிய கால அவகாசம் கிடைக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது.
News January 30, 2026
சற்றுமுன்: மதுபானங்களின் விலை குறைகிறது

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தகம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பீர் மீதான வரி 110% -யிலிருந்து 60% ஆக குறைக்கப்படலாம் எனவும் Premium Wine மீதான 150% வரி 130% ஆக குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி குறைக்கப்பட்டால் மது விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.


