News July 7, 2025
வீட்டில் வேல் வைத்து வழிபடலாமா?

‘வேலுண்டு வினையில்லை’ என்பதிலேயே இதற்கான விடை தெரிந்துவிடும். திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் திருநீறு பூசப்பட்டு, அதற்கு மேல் செம்பு வர்ணத்தில் ஒரு வேலும் வைக்கப்பட்டது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இப்படிப்பட்ட முருகனின் ஆயுதமான வேலினை வீட்டில் வைத்து வழிபட்டால் கர்ம வினைகள் அகற்றப்படும். வேலுக்கே உரிய மூலமந்திரத்தை நா மணக்க மணக்க கூற வாழ்வை செழிப்புறச் செய்வான் வேலாயுத நாயகன்.
Similar News
News July 7, 2025
பொய் சொல்கிறதா TNPSC? அன்புமணி சரமாரி கேள்வி

2024, ஜூலையில் 17,502 பேருக்கு பணி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு 8,618 பேரே தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அறிவிப்புக்கு முன்பு எழுதப்பட்ட தேர்வு முடிவுகளைக் கொண்டு 17,702 பேரை தேர்வு செய்துவிட்டோம் என்று TNPSC அறிக்கை விடுவதா என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். TNPSC, திமுகவின் துணை அமைப்பாக மாறாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News July 7, 2025
மூத்த அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங் காலமானார்

‘UP Tiger’ என அழைக்கப்பட்ட மூத்த அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங்(87) காலமானார். மன்காபூர் அரச குடும்பத்தை சேர்ந்த இவர் கோண்டா தொகுதியிலிருந்து 4 முறை MP-யாக தேர்வு செய்யப்பட்டவர். தற்போது வெளியுறவுத்துறை இணை அமைச்சராக உள்ள கீர்த்தி வர்தமானின் தந்தையாவார். உத்தரபிரதேச அரசியலில் மிக முக்கியமான முகமாக அறியப்பட்ட குன்வர் மறைவுக்கு அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News July 7, 2025
KN நேரு சகோதரருக்கு எதிரான CBI வழக்கு ரத்து

2013-ல் IOB-ல் பெற்ற கடனில் செய்த மோசடியால் ₹22.48 கோடி இழப்பு ஏற்பட்டதாக KN நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு எதிராக புகார் எழுந்தது. இதன்பேரில் CBI பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் ED சோதனை மேற்கொண்டது. இதனிடையே, இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ₹15 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டு CBI பதிவு செய்த வழக்கை HC ரத்து செய்துள்ளது.