News March 17, 2024
ஒரே கட்டமாக ஒரே தேர்தல் முயற்சிக்கலாமே?

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முயற்சிப்பதற்கு முன்னால் குறைந்தபட்சம் ஒரே கட்டமாக ஒரே தேர்தல் என்பதை நாம் முயற்சிக்கலாமே என மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.19இல் தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் முடிவுகளுக்கு, 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
Similar News
News November 14, 2025
இனி RJD ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை: PM மோடி

பிஹார் மக்கள் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்துவிட்டதாக PM மோடி தெரிவித்துள்ளார். பிஹாரில் இருந்து முற்றிலுமாக RJD நீக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இனி அவர்களின் ஆட்சி மீண்டும் வர வாய்ப்பே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இஸ்லாமியர்கள், யாதவர்கள் கூட்டணியில் வெற்றி பெறலாம் என நினைத்ததாகவும், ஆனால் நாம் பெண்கள் மற்றும் இளைஞர்களால் வெற்றி பெற்றுள்ளோம் எனவும் மோடி கூறியுள்ளார்.
News November 14, 2025
BREAKING: பிஹாரில் 125+ இடங்களில் NDA வெற்றி

பிஹார் தேர்தலில் NDA கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 147 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆட்சி அமைப்பதற்கு தேவையான 122 இடங்களுக்கு மேல் NDA கூட்டணி கைப்பற்றியுள்ளது. MGB கூட்டணி 17 இடங்களிலும், ஒவைசியின் AIMIM 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிவில் NDA கூட்டணி 200+ இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது.
News November 14, 2025
தேஜஸ்வி யாதவ் வெற்றி

பிஹார் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் சில சுற்றுகளில் பாஜக வேட்பாளர் சதீஷ்குமாரை விட பின்தங்கி இருந்தார். எனினும், அடுத்தடுத்த சுற்றுகள் முடிவில் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி வென்றுள்ளார். அதேநேரம் அவரது MGB கூட்டணி 35 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.


