News April 22, 2024

வீட்டில் கருட புராணம் படிக்கலாமா?

image

கருடபுராணமானது, இந்து சமய பதினெண் புராணங்களில் 17ஆவது புராணம். விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போல அது அமைந்துள்ளது. அதை வீட்டில் படிக்கலாமா, கூடாதா என்ற சந்தேகம் பலரிடையே உள்ளது. மரண பயத்தை விட்டுவிட்டால், வாழ்வில் வேறு எந்த பயமும் நம்மைத் தாக்காது. எனவே அழிவில்லாத ஆன்மாவின் பயணம் குறித்து அறிய கருடபுராணம் படிப்பது நல்லதே, அதனால் தீங்கு நிகழாது என்று ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.

Similar News

News January 16, 2026

₹4,000.. வந்தது மகிழ்ச்சியான செய்தி

image

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 22-வது தவணை வரும் பிப்ரவரியில் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் 21வது தவணைத் தொகையை பெறாத விவசாயிகளின் கணக்குகளில் அத்தொகையும் சேர்த்து மொத்தம் ₹4,000 வரவு வைக்கப்படும் என தகவல் வந்துள்ளது. அதற்கு முன்னதாக விவசாயிகள் தங்கள் e-KYCஐ முடிக்க வேண்டும் எனவும், வங்கி கணக்கை ஆதாருடன் இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 16, 2026

ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை: சச்சின் பைலட்

image

ஆட்சி அதிகாரத்தில் காங்., பங்கு கேட்பதில் தவறில்லை என்று சென்னையில் காங்., முக்கிய தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸுக்கு என்று தனி வாக்கு சதவிகிதம் இருக்கிறது எனக்கூறிய அவர், பல கட்சிகள் கேட்பதுபோலத்தான், காங்., நிர்வாகிகளும் ஆட்சியில் பங்கு கேட்கின்றனர் என்றும், பாஜகவை எதிர்க்க இப்போது மட்டுமல்ல, எப்போதும் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 16, 2026

விளம்பர கூட்டணியில் நடிகர் அஜித்குமார்

image

நீண்ட காலமாக விளம்பரத் துறையில் இருந்து விலகியிருந்த அஜித்குமார், தற்போது ‘Campa Energy’ என்ற விளம்பரத்தில் நடித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. இதற்காக Reliance Consumer Products (RCPL) நிறுவனத்துடன் AK Racing குழு ஒப்பந்தத்தில் (கூட்டணி) கையெழுத்திட்டுள்ளது. இதன்படி ‘Campa Energy’ பிராண்ட், AK Racing-ன் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!