News June 22, 2024
சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடலாமா?

நவகிரகங்களில் ஆயுள் காரகனாக விளங்கக்கூடிய சனிபகவானின் ஆதிக்கத்தை வைத்து மனிதர்களின் ஆயுட்காலமானது அமைகிறது. அந்த சனிபகவானை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் விஷ்ணு எனப்படும் பெருமாள். ஆதலால் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் பெருமாளை வணங்கக் கூடியவர்கள், விரதம் இருப்பவர்கள் அதை தவிர்ப்பது சிறந்தது என ஆன்மீக சாஸ்திரம் கூறுகிறது.
Similar News
News September 13, 2025
சற்றுமுன்: முன்னாள் முதல்வர் காலமானார்

மேகாலாயா Ex CM டோன்வா டெத்வெல்சன் லாபங்(91) உடல் நலக்குறைவால் ஷில்லாங்கில் உள்ள பெத்தானி ஹாஸ்பிடலில் காலமானார். ஏழை குடும்பத்தில் பிறந்து சாலை தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய இவர், 1992 – 2008 வரை 4 முறை மேகாலயாவின் முதல்வராக இருந்துள்ளார். 1972-ல் சுயேச்சையாக நோங்போ தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று MLA ஆன பிறகு பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். #RIP
News September 13, 2025
வேன்களை மினி பஸ்களாக இயக்க தமிழக அரசு அனுமதி

குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவை கிடைக்கும் நோக்கில், 12-16 இருக்கைகள் கொண்ட வேன்களை (Maxi Cab) மினி பஸ்களாக இயக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்த வேன்களில் நின்று செல்ல பயணிகளுக்கு அனுமதியில்லை. அதேநேரம், நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பஸ்கள் 200 செ.மீ., உயரம் இருக்கலாம். அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும் பஸ்கள் 150 – 200 செ.மீ., உயரம் இருக்கலாம்.
News September 13, 2025
சளி தொல்லைக்கு இந்த டீ ஒன்றே போதும்!

மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பவரா நீங்கள் ? உங்களுக்காக அருமருந்து இதோ! வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, சித்தரத்தை, ஆடாதோடை இலை இவற்றை சம அளவு எடுத்து வறுத்து, இடித்து பொடியாக்கி அதை கொதிக்கும் நீரில் போட்டு இறக்கிவிட்டு தேன் கலந்து குடியுங்கள் போதும். சளி தன்னால் நீங்கிவிடும். அத்துடன் உடலுக்கு புத்துணர்வும் வரும். ஷேர் பண்ணுங்க!