News October 25, 2025
பேப்பரில் பொட்டலம் கட்டிய உணவுகளை சாப்பிடலாமா?

செய்தித்தாள்களில் பொட்டலம் கட்டப்படும் உணவுப் பொருள்களை உட்கொள்வது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என FSSAI எச்சரித்துள்ளது. நாளிதழ்களில் அச்சிடும் மையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும், பேசிலஸ் நுண்ணுயிரியல் தாக்குதலும் குடற்புற்றுநோயை ஏற்படுத்துகிறதாம். இதன் காரணமாகவே உணவுப் பொருள்களை பேக்கிங் செய்வதற்கும், பாதுகாத்து வைப்பதற்கும் தாள்களை பயன்படுத்த வேண்டாமென FSSAI அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 25, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 25, ஐப்பசி 8 ▶கிழமை:சனி ▶நல்ல நேரம்:7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்:1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News October 25, 2025
₹4000 கோடி நிதியை வீணடித்த திமுக: H.ராஜா

தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மாநிலத்தின் வளர்ச்சியையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதாக H.ராஜா விமர்சித்துள்ளார். விவசாயிகள் நெல்லை பாதுகாக்க நிரந்தரக் கிடக்கு கூட திமுக அரசு 4 ஆண்டுகளில் அமைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வெள்ள தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு கொடுத்த ₹4,000 கோடி பேரிடர் மேலாண்மை நிதியை அரசு சரியாக பயன்படுத்தவில்லை எனவும் சாடியுள்ளார்.
News October 25, 2025
உடல் வலிகளுக்கு சிறந்த ஆசனங்கள்

அன்றாட உடல் வலிகளுக்கு எளிய யோகா ஆசனங்கள் பயனளிக்கும். ஒவ்வொரு ஆசனமும் உங்கள் தசைகளை தளர்த்தவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மருந்துகள் இல்லாமல் இயற்கையாகவே வலியைக் குறைக்கிறது. என்ன பிரச்னைக்கு, என்ன ஆசனம் செய்யலாம் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்க நண்பர்களுக்கு share பண்ணுங்க.


