News August 5, 2024
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியுமா?

2013இல் காங்கிரஸின் மத்திய அரசில், உள்துறை இணையமைச்சராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் பதவி வகித்தபோது தேசிய பேரிடர் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அரசின் வழிகாட்டுதல்களில் ஓர் இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை” எனப் பதிலளித்துள்ளார். இதே நிலைதான் தற்போதுவரை தொடர்வதால் வயநாடு நிலச்சரிவு பேரிடராக அறிவிக்கப்படுவது சந்தேகமே.
Similar News
News March 28, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 646 ▶குறள்: வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். ▶பொருள்: மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.
News March 28, 2026
₹2.38 லட்சம் கோடிக்கு ஆயுதம்: மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த ராஜ்நாத் சிங் தலைமையிலான DAC, ₹2.38 லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதில் போக்குவரத்து விமானங்கள், S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, டிரோன்கள், டாங்கி எதிர்ப்பு அமைப்புகள், தொலைவிலிருந்து இயக்கப்படும் தாக்குதல் விமானங்கள், தனுஷ் துப்பாக்கி அமைப்பு மற்றும் வான்வழி கண்காணிப்பு அமைப்பு ஆகியவை அடங்கும்.
News March 28, 2026
Otrovert.. இது தெரியுமா உங்களுக்கு?

Otrovert என்பது Introvert-க்கும், Extrovert-க்கும் நடுவில் இருக்கும் ஒரு தனிப்பட்ட மனநிலை. இவர்கள் அனைவருடனும் இயல்பாக பழகினாலும், உள்ளுக்குள் தனிமையாகவே உணர்வார்கள். பேசும் திறன் இருந்தாலும், எல்லோருடனும் நெருக்கமாக பழக விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு அமைதியான சூழல் மிகவும் முக்கியம். இது ஒரு குறை அல்ல; மாறாக, தனித்துவமான ஒரு குணம் என்று அமெரிக்க மனநல மருத்துவர் ராமி கமின்ஸ்கி கூறுகிறார்.


