News October 29, 2025
தடுப்பூசி போடுவதால் ஆட்டிசம் ஏற்படுமா?

குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசிகள் ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்துவதாக X-ல் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதை சுட்டிக்காட்டி, இந்திய பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டிருந்தார். அதில் கமெண்ட் செய்த டாக்டர் சிரியாக், இதுபோன்ற பூமர் அங்கிள் சொல்வதை பெற்றோர்கள் கேட்க வேண்டாம், அந்த ஆய்வறிக்கை தடுப்பூசிக்கு எதிரானவர்களால் பணம் கொடுத்து பரப்பபடுவது என்றும் விமர்சித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
வெங்கட் பிரபு & SK படத்தில் இணையும் ‘லோகா’ நடிகை!

நடிகர் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவுடன் இணைய உள்ளார். Time Travel கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தில் SK-வுக்கு ஜோடியாக ‘லோகா’ நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஜோடி ஏற்கெனவே ‘ஹீரோ’ படத்தில் நடித்திருந்த நிலையில், மீண்டும் இணைய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News October 30, 2025
தங்கம் விலை மீண்டும் குறைந்தது

உலக சந்தையில் கடந்த 17-ம் தேதி புதிய உச்சமாக $4,379-க்கு விற்பனையான 1 அவுன்ஸ் தங்கம் இன்று $3,949 ஆக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பின் தாக்கத்தால் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நேற்று (அக்.29) இதன் விலை ₹2000 உயர்ந்தது. ஆனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால், நம்மூரிலும் இன்று விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 30, 2025
விவசாயம் தெரியாதவர் விஜய்: MRK பன்னீர்செல்வம்

நெல் கொள்முதல் தொடர்பாக திமுகவை விஜய் விமர்சித்திருந்தார். இந்நிலையில், விவசாயம் பற்றி தெரியாமல் புதுப்புது தலைவர்கள் எல்லாம் அறிக்கை விடுவதாக அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். கொரோனா காலத்தில் விஜய் எங்கு சென்றார் என கேள்வி எழுப்பிய அவர், மக்களின் கஷ்ட காலத்தில் களத்தில் நிற்பவரே சிறந்த தலைவர் எனவும் தெரிவித்தார். மக்களின் முதல்வராக ஸ்டாலின் செயல்படுவதாகவும் கூறினார்.


