News March 2, 2025

USA சொன்னால் சுதந்திரத்தை விட முடியுமா? ஜெலன்ஸ்கி

image

USA ஆதரவு இல்லாமல் போர் நிறுத்தம் சாத்தியமில்லை தான், ஆனால் அதற்காக தங்களது சுதந்திரத்தை இழக்க முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். புதின் போருக்கு வரமாட்டார் என்ற உத்தரவாதம் இல்லாமல் சண்டையிடுவதை நிறுத்த முடியாது எனவும், இதுவரை USA அளித்த ஆதரவிற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் உடனான காரசாரமான பேச்சுவார்த்தைக்கு பின்னால் அவர் இதை தெரிவித்துள்ளார்.

Similar News

News March 12, 2026

பெண்களுக்கு இலவச தையல் மெஷின்: அரசின் சூப்பர் திட்டம்

image

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், TN அரசு பெண்களுக்கு இலவசமாக தையல் மெஷின்களை வழங்குகிறது. இதனை பெற விரும்பும் பெண்கள் 6 மாதம் தையல் பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ₹72,000-க்கு மிகாமலும், வயது 40-ஐ தாண்டாமலும் இருக்க வேண்டும். முழு தகவல்களை அறிய www.tnsocialwelfare.tn.gov.in இணையதளத்தை பார்வையிடுங்கள். SHARE.

News March 12, 2026

பிரபல இளம் நடிகர் ஹரி முரளி காலமானார்

image

‘ரசிகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாள சினிமாவில் பிரபலமடைந்த நடிகர் ஹரி முரளி(27) தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ‘அண்ணன் தம்பி’, ‘பட்டணத்தில் பூதம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் VFX கலைஞராகவும் பணிபுரிந்து வந்தார். ஹரி முரளியின் திடீர் மரணம் மலையாள சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News March 12, 2026

மீண்டும் 100 டாலரை கடந்த கச்சா எண்ணெய்

image

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு $100ஐ தாண்டியுள்ளது. போர் தொடங்கிய பிறகு $120ஐ எட்டியிருந்த விலை, பதற்றம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து சமீபத்தில் $89 ஆக குறைந்தது. கச்சா எண்ணெய் பேரல் $130 வரை அதிகரித்தாலும், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயராது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!