News April 2, 2025
வக்ஃபு மசோதாவை பாஜகவால் நிறைவேற்ற முடியுமா?

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 240 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களையும் சேர்த்து பாஜகவுக்கு 295 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இதில் டிடிபி, ஜேடியூவின் 28 எம்.பி.க்களும் அடங்குவர். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு 234 எம்.பி.க்களே உள்ளன. இதனால் மக்களவையில் மசோதா நிறைவேறுவது உறுதி.
Similar News
News December 10, 2025
திருச்சி: ரூ.50,000 பரிசு அறிவிப்பு!

நவல்பட்டு அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் 6-ம் ஆண்டு கபடி போட்டி வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.50,000, ரூ.40,000, ரூ.30,000, ரூ.20,000 என ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கபடி வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
OPS மகன்கள் அதிமுகவில் இணைகிறார்களா?

OPS மகன்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க மூத்த நிர்வாகிகள் சிலர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனை EPS எதிர்க்கவில்லை என்றாலும், தள்ளிப்போடுகிறார் என விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர். ஒருவேளை மகன்களை சேர்த்துக்கொள்ள EPS தாமதித்தால், தனது ஆதரவாளர்களோடு பாஜக தரும் 5 சீட்களை பெற்றுக்கொண்டு NDA கூட்டணியில் OPS இடம்பெறுவார் என்கின்றனர். இதுபற்றிய Official தகவலுக்கு காத்திருப்போம்.
News December 10, 2025
டைரக்டராக களமிறங்குகிறாரா கீர்த்தி சுரேஷ்?

தனக்கு டைரக்ஷனில் ஆர்வம் இருப்பதாகவும், பல கதைகளை எழுதி வருவதாகவும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சொல்லியிருந்தார். இதையொட்டி சில அசோசியேட் இயக்குநர்களை அழைத்து அவர் கதை விவாதம் நடத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு செட் ஆவதுபோல் ஒரு கதையை அவர் உருவாக்கி வருவதாகவும் பேசப்படுகிறது. கதை முழுமையாக தயாரான உடன் இதுகுறித்த Official தகவல் வெளியாகலாம்.


