News April 27, 2025

ரேஷன் பருப்பில் கலப்படமா? ஆய்வு செய்ய உத்தரவு

image

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த பருப்பில் கலப்படம் செய்யப்பட்டதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அண்மையில் கண்டுபிடித்தார். இதுதொடர்பாக 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் வெளியானதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வாணிப கிடங்குகள், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து, பருப்பின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News

News October 17, 2025

₹500 நோட்டுகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

image

இந்தியாவில் 2024- 25ம் நிதியாண்டில் மட்டும் 2.17 லட்சம் எண்ணிக்கையில் போலி ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், 1.17 லட்சம், ₹500 நோட்டுகளாம். ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் வெள்ளை இடம் இருக்கும். அதனை மேலே பிடித்து பார்த்தால் காந்தி முகம் வாட்டர்மார்க்காக தோன்றும். ₹500 நோட்டாக இருந்தால், 500 என்ற எண் அதில் தெரியும். போலி நோட்டு அச்சிடுபவர்களால் இதனை அச்சிட முடியாது. SHARE

News October 17, 2025

வழக்கத்தைவிட கூடுதல் மழை!

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்றுவரை, இயல்பைவிட 42% கூடுதலாக பெய்துள்ளதாக IMD தெரிவித்துள்ளது. நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழக முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த காலகட்டத்தில், இயல்பாக 77.1 மி.மீ. மழை பெய்யும் நிலையில், இன்றுவரை 109.7 மிமீ மழை பெய்துள்ளது.

News October 17, 2025

தீபாவளியை சிறப்பாக்கும் வண்ணக் கோலங்கள்!

image

தீபாவளி என்றால் பட்டாசு, புத்தாடை, பலகாரங்களோடு வாசலில் போடும் அழகான கோலங்களும் அப்பண்டிகையின் சிறப்பாகும். தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் என்ன கோலம் போட்டிருக்கு என்று பார்ப்பதே பலருக்கும் பிடித்த ஒரு விஷயம். அப்படி வீட்டு வாசலை அலங்கரிக்கும் அழகான கோலங்கள் உங்களுக்காக… ஒவ்வொன்றாக SWIPE செய்து பாருங்க…

error: Content is protected !!