News May 14, 2024
ராகுல் காந்தியால் பிரதமராக வர முடியுமா?

திமுக தலைவர் ஸ்டாலினோ அல்லது ராகுல் காந்தியோ இந்தியாவின் பிரதமராக வர முடியுமா? என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். INDIA கூட்டணி கட்சி தங்களின் பிரதமர் யார் என்று தெரியாமல் முழித்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், வருடத்துக்கு ஒருவர் பிரதமராக வருவோம் என்பது இந்தியாவுக்கு நல்லதல்ல என்றார். அரசியலில் சுய நலத்துக்காக கூட்டணியை ஏற்படுத்தியவர்கள் வென்றதாக வரலாறு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 17, 2026
ரஜினிக்கு மனவலிமை இல்லையா? அண்ணாமலை

ரஜினியின் அரசியல் குறித்து <<19363014>>ஆதவ் அர்ஜூனா<<>> பேசியதை அண்ணாமலை கண்டித்துள்ளார். ரஜினியின் மனவலிமை குறித்து, மாமனாரின் பணத்தை வைத்து பல கட்சிகள் மாறி அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதை, illusion (மாயை) என்று கூறலாம் என அண்ணாமலை சாடியுள்ளார். அனைத்து பிரச்னைகளையும் கடந்து ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல எனவும் கூறியுள்ளார்.
News March 17, 2026
8 MP-க்களின் இடைநீக்கம் ரத்தாகிறது

லோக்சபாவில் அமளியில் ஈடுபட்ட மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 MP-க்கள் ஏப்ரல் 2-ம் தேதி வரை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களின் தண்டனையை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இடைநீக்கத்தை ரத்து செய்ய சபாநாயகர் நேற்று முடிவெடுத்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
News March 17, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 17, பங்குனி 3 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்:3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை:12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


