News November 18, 2024
சுகர் உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா?
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டாலும், சிலவகை வாழைப்பழங்களை சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குளுக்கோஸ் அதிகம் உள்ள பூவன் பழம், ரஸ்தாளி ஆகிய பழங்களை சர்க்கரை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அதிக நார்ச்சத்து உள்ள பச்சை வாழைப்பழம், செவ்வாழை, நேந்திரம் பழம் போன்றவற்றை சாப்பிடலாம் என்றும் கூறுகிறார்கள்.
Similar News
News November 20, 2024
மக்களை அகதிகளாக்குவது தான் சாதனை: TTV
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடியிருப்புகளை அகற்றி மக்களை அகதிகளாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனை என TTV தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருவள்ளூர் கோலடியில், ஏரி ஆக்கிரமிப்பு என ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்ற முயல்வதாக குறிப்பிட்ட அவர், போராடும் மக்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கண்டித்துள்ளார். குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையால் தச்சுத் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
News November 20, 2024
ஆர்வமில்லாத வாக்காளர்கள்: குறைந்த வாக்குப்பதிவு
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பு காணப்பட்டாலும், வாக்காளர்களுக்கு ஆர்வமில்லாத நிலையே நீடித்ததால் வாக்குப்பதிவு அளவும் குறைந்துள்ளது. அதனால் இதுவரை மகாராஷ்டிரத்தில் மொத்த வாக்குப்பதிவு 58% ஆகவே உள்ளது. ஜார்க்கண்டில் ஓரளவு வாக்குப்பதிவு அதிகரித்து 67.59 வாக்குகள் பதிவாகியுள்ளது.
News November 20, 2024
FLASH: நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின்
நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான அவர், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தை இருப்பதை சுட்டிக் காட்டி ஜாமின் கோரியிருந்தார். இதற்கு காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில், நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.