News September 9, 2025
து.ஜனாதிபதி தேர்தலில் நியமன MP-க்கள் வாக்களிக்கலாமா?

நாட்டின் 17-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது. இதில் லோக்சபா, ராஜ்யசபா MP-க்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். அந்த வகையில், ராஜ்யசபாவில் உள்ள நியமன MP-க்களும் வாக்களிக்கலாம். ஆனால், அவர்களால் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாது. ராஜ்யசபாவில் 12 நியமன MP-க்களை ஜனாதிபதி, தனது அதிகாரத்துக்கு உட்பட்டு நியமனம் செய்கிறார்.
Similar News
News September 9, 2025
தமிழகத்தில் வேலை கேட்போர் குறைந்துள்ளனர்: அமைச்சர்

தமிழகத்தில் வேலை கேட்டு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். நிதிநிலை மோசமாக இருந்தாலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை திமுக அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2024 இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) தரவுகளின்படி, தமிழகத்தில் வேலையின்மை விகிதம் 5.2% ஆகும். இது தேசிய சராசரியை விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
News September 9, 2025
2025ல் அதிக வசூல்.. முதலில் இருப்பது ‘கூலி’ இல்லை!

இந்த ஆண்டில் விஜய்யை தவிர்த்து, தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களின் பல படங்கள் வெளியாகியுள்ளன. அதில், சில படங்களே பெரியளவில் வசூலைக் குவித்துள்ளன. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் வெளியான படங்களில் தமிழகத்தில் அதிக வசூலைக் குவித்த டாப் 5 படங்களின் லிஸ்ட் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. சினிமா வட்டாரங்களின் தகவல் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
BREAKING: முடிவை அறிவித்தார் செங்கோட்டையன்

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக செங்கோட்டையன் ஒப்புக்கொண்டுள்ளார். மக்கள் நலனுக்காகவும், இயக்கம் (ADMK) வலுபெறவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அறிவித்துள்ளார். மேலும், அமித்ஷா உடன் ‘தனது அரசியல் நிலைபாடு & தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; இயக்கம் வலுப்பெற வேண்டுமென கருத்துகளை முன்வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.