News April 5, 2025

UPI-ல் கிரெடிட் கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்யலாமா?

image

செய்ய முடியும். பெரும்பாலான முக்கிய வங்கிகள் இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை UPI செயலிகளுடன் இணைக்க அனுமதிக்கின்றன. கிரெடிட் கார்டு விவரங்களை செயலியில் கொடுத்து, UPI Pin-ஐ கொடுத்தால் போதும். ஒரு பரிவர்த்தனையை செய்ய, ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு விவரங்களைக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. UPI மூலம் எளிதாக கார்ட் வரம்பிற்குள் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

Similar News

News April 6, 2025

நிர்மலா உடன் சந்திப்பா? வேல்முருகன் மறுப்பு

image

சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சீமான், வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்ததாக தகவல் வெளியானது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருக்கும் வேல்முருகன் சந்திப்பு என்பது அரசியல் ரீதியாக பேசுப்பொருளாக மாறியது. இந்நிலையில், நிர்மலாவை தான் சந்திக்கவில்லை; இது முற்றிலும் தவறான தகவல் என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

News April 6, 2025

CPIM பொதுச்செயலாளராகும் MA.பேபி!

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6ஆவது தேசிய பொதுச்செயலாளராக கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிபிஎம்(CPIM) மூத்த தலைவர்களில் ஒருவரான இவரது பெயரை பிரகாஷ் காரத் பரிந்துரை செய்துள்ளார். மதுரையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

News April 6, 2025

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜாகுவார்!

image

ஆடம்பர பிரியர்களான அமெரிக்கர்களுக்கு ஆடம்பர கார் நிறுவனமான ஜாகுவார் அதிர்ச்சியைக் கொடுத்து இருக்கிறது. அதற்கு காரணம் அதிபர் டிரம்ப். வாகன உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு 25% வரியை அவர் விதித்ததால், அமெரிக்காவுக்கு தனது கார்களை ஏற்றுமதி செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது. இத்தனைக்கும் கடந்த ஆண்டில் கால் பங்கு கார்களை அமெரிக்காவில் தான் ஜாகுவார் விற்பனை செய்திருந்தது.

error: Content is protected !!